374. வான நகரத்தின் மேன்மையென

வான நகரத்தின் மேன்மையென சொல்லுவோம்

பல்லவி

வான நகரத்தின் மேன்மையென சொலுவோம், கன
வலன் நலவருக்கருள்.

சரணங்கள்

 1. பானொளிரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள்
பன்னிரு முத்துக்கள் தெரு பொன்னின்மயமே;
தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான ஆறும்
ஜீவதருவும் இருக்கும் செப்பரும் அழகதான. - வான

2. அங்குநோய், துன்பம், விசாரம், அக்ரமம், கண்ணீர், தரித்திரம்
அற்பமு மிருப்பதில்லை, சொற்பமாகிலும்
பொங்கியே முச்சத்துருக்கள் போரினுக் கிழுப்பதில்லை,
புண்ணியனார் சொன்னதிரு உன்னத எருசலையாம். - வான

3. அந்நகர்க் குடிகள் வெண்மையான அலங்காரமான
அர்ச்சய உடுப்பு, சிரமானதிற் கிரீடம்
மன்னவர் போலே அணிந்து மகிமையி னாசனத்தில்
வாய்மையாக வீற்றிருப்பர்; தூய்மையான அந்த நல் - வான

4. நேயமுற்பிதாக்கள், தீர்க்கர், நின்மலன் அப்போஸ்தலர்கள்,
நீதிமான்கள், எல்லவரும் தூதர் நல்லோரும்
ஓய்வின்றித் தோத்ர கீத உச்சிதத் தொனிமுழக்கி
உன்னதனைப் போற்றுவார்கள்; பன்னரும் சிறப்பதுள்ள - வான


ராகம்: காம்போதி
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்:  ஞா. சாமுவேல்