375. வானம் பூமியோ பராபரன்

வானம் பூமியோ

பல்லவி

வானம் பூமியோ? பராபரன்
மானிடன் ஆனாரோ? என்ன இது?

அனுபல்லவி

ஞானவான்களே, நிதானவான்களே,-என்ன இது?-வானம்

சரணங்கள்

 1. பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்
பொறுமைக் கிருபாசனத்துரை,
பூபதி வந்ததே அதிசயம்!-ஆ! என்ன இது! - வானம்

2. சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,
நித்ய பிதாவினோர்‌ம
கத்துவக் குமாரனோ இவர்?-ஆ! என்ன இது? - வானம்

3. மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலே
கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,[1]
நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! - ஆ! என்ன இது? - வானம்

4. வேறே பேரல்ல, சுரர் விண்ணவர் ஆருமல்ல‌;
மாறில்லாத ஈறில்லாத‌
வல்லமைத் தேவனே புல்லில் கிடக்கிறார்! - ஆ! என்ன இது? - வானம்

5. சீயோனின் மாதே, இனி க்ஷெணந்தரியாதே,
மாயமென்ன? உனக்குச் சொல்லவோ?
வந்தவர் மணவாளனல்லவோ?-ஆ! என்ன இது? - வானம்


ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: திஸ்ர ஏகதாளம்
ஆசிரியர்: வே. சாசுதிரியார்

[1]. ஞானம்