இவ்வாலயம் வந்தருள் கூரும்
பல்லவி
மாமனோகரா! இவ்வாலயம்-வந்தருள் கூரும்,
மாமனோகரா! பராபரா!
சரணங்கள்
1. பூமியாளும் நாதனே, நரர்
போகம் நாடும் நீதனே!
நாமே வாழ்த்தும் தாசர் நடுவில்
தாமதம் இல்லாமல் எழுந்தருள்! - மா
2. நாதனே, இவ்வாலயத்தை
நலமாய்த் தந்தாய் தாசர்க்கே;
பாதம் போற்றி வாழ்த்துவோம்; குரு
பரனே, பராபரா, தினம். - மா
3. நின் திருத்தயை பொறுமை
நின் திரு மகிமையும்
சந்தமாய்[1] நிறைந்திட இதில்
சந்ததம் ஈவாய் நின் ஆசியை. - மா
4. தோத்திரம் ஜெபம் தியானம்,
தூய்மையாம் பிரசங்கமும்,
பார்த்திபா[2] இவ்வாலயத்தில்
பக்தியாகவே நடந்திட. - மா
5. நீதி ஞாயம் தெய்வபக்தி,
நேர்மைபேதத் தியானமும்
நாதனில் விசுவா சமும் மிஞ்சி
நன்கு போற்ற தாசர்க்கருள் புரி. - மா
ராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: ச.ஜெ. சிய்
[1] அழகாய்
[2] அரசனே