344. மரித்தாரே கிறிஸ்தேசு

மரித்தாரே கிறிஸ்தேசு

பல்லவி

மரித்தாரே கிறிஸ்தேசு
உனக்காகப் பாவி.

சரணங்கள்

1. திரித்துவத் துதித்தோர் தெய்வீக சேயே,[1]
தீன தயாளத்வ மனுவேலே பாராய். - மரித்தாரே

2. லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமந்தே,
லோலாயமாயச் சிலுவையிலே பாராய். - மரித்தாரே

3. மகத்தான தண்டனை நிவிர்த்திப்பதற்கே,
மா பாடுபட்டுத் தரித்ததே பாராய். - மரித்தாரே

4. மன்னிப்புண்டாக்கவே மத்தியஸ்தராக
மாவாதைக்குள்ளானானார் தாமே நீ பாராய். - மரித்தாரே         


ராகம்: கரஹரப்பிரியை
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: ஈ. பாக்கியநாதன்

[1] குமாரன்