343. மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்கு

மங்கள ஜெய மங்களம்

பல்லவி

மங்களம்! ஜெயமங்களம்! மகத்துவற்கு
மங்களம்! ஜெயமங்களம்!

சரணங்கள்

1. எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும்
பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும். - மங்களம்

2. நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத்
தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும் - மங்களம்

3. சுத்தரித்து நரர் சுக உலகம் அடையப்
பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும். - மங்களம்

4. இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும்
செம்மையுடன் நடத்தும் திரியேக தேவனுக்கு. - மங்களம்


ராகம்: சௌராஷ்டிரம்
தாளம்:  சாபு தாளம் 
ஆசிரியர்:  யோ. பால்மர்