345. மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்

மரித்தோர் உயிர்த்தெழுவார்

பல்லவி

மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்,
வானெக்காளத் தொனி முழங்க.

அனுபல்லவி

எரி புகை மேக ரத மேறி
ஏசு மகா ராஜன் வருங்கால். - மரித்தோர்

சரணங்கள்

1. தூதர் மின் னாற்றிசை துலங்க,[1]
ஜோதி வான் பறை இடி முழங்க,
பாதகர் நெஞ்சம் நடுநடுங்க,
பரிசுத் தோர் திரள் மனதிலங்க. - மரித்தோர்

2. வானம் புவியும் வையகமும்
மட மட வென்று நிலை பெயர,
ஆன பொருளெல்லாம் அகன் றோட,
அவரவர் தம் தம் வரிசையிலே. - மரித்தோர்

3. அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர்
அழியா மேனியை அணிந்திடுவார்;
எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர்
என்றும் வாழும் ஜோதிகளாய். - மரித்தோர்


ராகம்: குரஞ்சி
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: சு.ச. ஏசடியான்

[1] தூதர் ஒளி நான்கு திசைகளிலும் விளங்க