தினசரி ஜெபங்கள்
குடும்பத்தலைவர் தன் குடும்பத்தாருக்கு காலையும் மாலையும் ஜெபிப்பதற்கு எவ்விதம் கற்றுக்கொடுக்க வேண்டும்.
காலை ஜெபம்
காலையில் நீங்கள் எழுந்திருக்கும்போது பரிசுத்த சிலுவையின் அடையாளத்தை இட்டு கூற வேண்டியது:
பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.
பின்இ முழங்காற்படியிட்டு அல்லது நின்று கொண்டு விசுவாசப்பிரமாணத்தையும் கர்த்தரின் ஜெபத்தையும் ஒப்புவியுங்கள். நீங்கள் விரும்பினால் கீழ்வரும் சிறிய ஜெபத்தையும் கூறலாம்:
என்னுடைய பரலோகப்பிதாவேஇ இந்த இரவில் என்னை எல்லா தீமையிலிருந்தும் ஆபத்திலிருந்தும் பாதுகாத்ததற்காக உமது நேசகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய் நான் நன்றியை ஏறெடுக்கிறேன். இந்த நாளிலும் என்னை பாவத்திலிருந்தும் ஒவ்வொரு தீங்கிலிருந்தும் பாதுகாக்கவும் என்னுடைய எல்லாச் செயல்களும், என் வாழ்வும் உம்மை மகிழ்விக்கும்படியாக இருக்கவும் மன்றாடுகின்றேன். நான் உம்முடைய கரங்களில் என்னையும் என் உடல், ஆவி, அனைத்தையும் ஒப்புவிக்கிறேன். பிசாசானவன் என்னை மேற்கொள்ளாதவாறு உம்முடைய பரிசுத்தத்தூதர் என்னுடன் இருப்பாராக. ஆமென்.
பிறகு ஒரு பாடலைப்பாடி, பத்துக்கட்டளைகள் அல்லது உங்களது தியானம் என்ன கருத்தை கூறுகிறதோ அதன்படி மகிழ்ச்சியுடன் உங்களது கடமைகளுக்கு புறப்பட்டுச் செல்லுங்கள்.
மாலை ஜெபம்
மாலை நீ படுக்கைக்குச் செல்லும்போது சிலுவையின் அடையாளத்தை இட்டு கூற வேண்டியதாவது:
பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.
பின், முழங்காற்படியிட்டு அல்லது நின்று கொண்டு விசுவாசப்பிரமாணத்தையும் கர்த்தரின் ஜெபத்தையும் ஒப்புவியுங்கள். நீங்கள் விரும்பினால் கீழ்வரும் சிறிய ஜெபத்தையும் கூறலாம்:
என்னுடைய பரலோகப்பிதாவே, இந்த நாளிலே என்னை கிருபையாய் பாதுகாத்ததற்காக உமது நேசக்குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய் நான் நன்றியை ஏறெடுக்கிறேன்;. என்னுடைய எல்லாப் பாவங்களையும், நான் செய்திருக்கும் தவறுகளையும் நீர் மன்னித்து இந்த இரவில் என்னை கிருபையாய் பாதுகாத்தருளும் என்று உம்;மை நோக்கி மன்றாடுகின்றேன். நான் உம்முடைய கரங்களிலே என்னையும் என் ஆத்துமா, சரீரம் அனைத்தையும் ஒப்புவிக்கிறேன். பிசாசானவன் என்மேல் வலிமை கொள்ளாதவாறு உம்முடைய பரிசுத்தத்தூதர் என்னுடன் இருப்பாராக. ஆமென்.
அதன் பின்பு மகிழ்ச்சியுடன் உறங்கச் செல்லுங்கள்.
தன்னுடைய குடும்பத்தாருக்கு ஆசீர்வாதத்தை கேட்கவும்இ நன்றி கூறவும் குடும்பத் தலைவரானவர் எவ்விதம் கற்பிக்க வேண்டும்.
ஆசீர்வாதத்தை வேண்டல்
குழந்தைகளும் குடும்பத்தின் உறுப்பினர்களும் பயபக்தியோடு உணவு மேசைக்குச் சென்று கரங்களைக் கூப்பிக் கூற வேண்டியது:
ஓ ஆண்டவரே, சகல ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக் காத்திருக்கின்றன. ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு ஆகாரம் கொடுக்கிறீர். நீர் உமது கரங்களைத் திறந்து, சகல உயிரினங்களினதும் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.
குறிப்பு:
வாஞ்சையானது திருப்தியாக்கப்படுவது என்பதின் அர்த்தம், அனைத்து பிராணிகளும் உண்பதற்கு ஏராளம் உண்டு. அவைகள் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாக உள்ளவைகளாக இருக்கின்றன. பராமரிப்பும், பேராசையும் இவ்விதமான திருப்தியைத் தடுக்கின்றன.
பிறகு கர்த்தரின் ஜெபத்தையும்இ பின்வரும் ஜெபத்தையும் கூற வேண்டும்:
ஆண்டவராகிய தேவனேஇ பரமபிதாவேஇ எங்களையும் உம்முடைய வளம் நிறைந்த நன்மையிலிருந்து நாங்கள் பெற்றுக்கொள்ளும் உம்முடைய ஈவுகளையும் ஆசீர்வதியும். இயேசு கிறிஸ்துவின் வழியாக ஆமென்.
நன்றி செலுத்துதல்
அப்படியே உணவு உண்ட பின்பு பயபக்தியுடன் கைகளைக் கூப்பிக் கூற வேண்டியது:
கர்த்தரை நன்றியோடு துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றென்றுமுள்ளது. மாம்சமான யாவருக்கும் ஆகாரம் கொடுக்கிறார்; அவர் மிருக ஜீவன்களுக்கும் கூக்குரலிடும் காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரம் கொடுக்கிறார். அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார். தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள் மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.
அதன் பின்பு கர்த்தருடைய ஜெபத்தையும் பின்வரும் ஜெபத்தையும் கூற வேண்டும்:
ஆண்டவராகிய தேவனேஇ பரமபிதாவே உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் என்றென்றும் வாழ்ந்து ஆண்டு கொண்டிருக்கிற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய் எங்களுக்கு அருளிய எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி ஏறெடுக்கிறோம். ஆமென்.