விசுவாசப்பிரமாணம்

விசுவாசப்பிரமாணம்

குடும்பத்தலைவர் இவற்றை எளிய முறையில் தன் வீட்டாருக்கு எவ்விதம் கற்பிக்க வேண்டும்.

முதலாம் பிரிவு
படைப்பு

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த சர்வ வல்ல பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்.

இதன் பொருள் என்ன?

விடை:

தேவன் என்னையும் சகல உயிரினங்களையும் உண்டாக்கி எனக்கு சரீரத்தையும் ஆத்துமாவையும் கண்கள், காதுகள் முதலான சகல அவயவங்களையும், புத்தியையும் சகல திறமைகளையும் அளித்து இப்போதுவரைக் காத்து நடத்தி வருகிறாரென்று விசுவாசிக்கிறேன்.
அல்லாமலும் என் சரீரத்திற்கும் ஜீவனுக்கும் வேண்டிய சகல ஆதாரமாகிய உடை, பாதணிகள், உணவு, வீடு வாசல், மனைவி, பிள்ளை, பணித்துறைகள், கால்நடைகள் முதலிய சகல ஆஸ்திகளையும் அவர் எனக்குத் தருகிறார். எனது சரீரம், வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துத் தேவைகளையும் பரிபூரணமாகவும் மிகுதியாகவும் அனுதினமும்; வழங்குகிறார். அவர் என்னை, சகல ஆபத்துகளிலுமிருந்து பாதுகாத்து, அனைத்துத் தீமைகளிலிலுமிருந்து மறைத்துத் தற்காத்து வருகிறார். அவர் இவை யாவற்றையும் பிதாவின் தூய தயை, கிருபையினால் யாதொரு தகுதியும் நன்மதிப்புமில்லாத எனக்கு செய்து வருகிறார்.
இவை எல்லாவற்றிற்காகவும் நன்றி செலுத்துபவனாகவும், சத்தமாக அவரைத் துதிக்கவும், ஊழியம் செய்யவும், கீழ்ப்படிந்து நடக்க வேண்டிய கடனாளியாகவுள்ளேன். அவருக்கு ஊழியஞ்செய்து கீழ்ப்படிந்து நடக்கவும் வேண்டிய கடனாளியாயிருக்கிறேன். இது முற்றிலும் உண்மையானது.

இரண்டாம் பிரிவு
மீட்பு

அவருடைய ஒரே குமாரனும் நம்முடைய ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பத்தில் உற்பவித்துக் கன்னிமரியாளிடத்தில் பிறந்து பொந்தியு பிலாத்துவின் கீழ் பாடனுபவித்து, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் பண்ணப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். பரத்துக்கேறி சர்வவல்ல பிதாவாகிய தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்.

இதன் பொருள் என்ன?

விடை:

பிதாவினிடத்தில் அநாதியாய்ப் பிறந்த மெய்யான தேவனும் கன்னி மரியாளிடத்தில் பிறந்த மெய்யான மனிதனுமாயிருக்கிற இயேசு கிறிஸ்து என் கர்த்தரென்று விசுவாசிக்கின்றேன். ஏனென்றால் சபிக்கப்பட்ட என்னை அவர் பொன்னினாலும் வெள்ளியினாலும் அல்ல அவரின் விலையேறப் பெற்ற தமது பரிசுத்த இரத்தத்தினாலும், குற்றமற்றப் பாடுகளினாலும், மரணத்தினாலும் எல்லாப் பாவங்களிலும் மரணத்திலும் பிசாசினுடைய வல்லமையிலுமிருந்தும் மீட்டுஇ இரட்சித்துக் கொண்டார். அதனால் நான் முழுவதுமாக அவருக்குச் சொந்தமாயிருந்துஇ நித்திய நீதியிலும்இ கபடற்ற உண்மையிலும்இ ஆசீர்வாதத்திலும் அவருடைய இராஜ்யத்திலே அவருக்குக் கீழாக ஊழியம் செய்யும் பொருட்டு, அவர் மரணத்திலிருந்தெழுந்து பிழைத்து சதா காலமும் நித்திய ஜீவனுடன் ஆண்டு கொண்டிருக்கிறார்;. இது முற்றிலும் உண்மையானது.

மூன்றாம் பிரிவு
பரிசுத்தமாக்குதல்

பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கிறேன். பொதுவான பரிசுத்த கிறிஸ்தவ சபையும், பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும், பாவமன்னிப்பும், சரீர உயிர்த்தெழுதலும், நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன். ஆமென்.

இதன் பொருள் என்ன?

விடை:

நான் எனது சுய புத்தியினாலும் பலத்தினாலும் என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கவும் அவரிடத்தில் வரவும் அவரை அடையவும் இயலவே இயலாது. ஆகையால் பரிசுத்த ஆவியானவர் சுவிசேஷத்தைக் கொண்டு என்னை வரவழைத்து தம்முடைய வரங்களால் என்னை பிரகாசிப்பித்து தூய்மைப்படுத்தி மெய்யான விசுவாசத்தில் நிலைத்திருக்கச் செய்கிறார். இப்படியே அவர் பூமியிலுள்ள முழுக் கிறிஸ்தவ திருச்சபையையும் வரவழைத்து கூட்டிச் சேர்த்து, பிரகாசிப்பித்து பரிசுத்தமாக்கி மெய்யான ஒரே விசுவாசத்திலே இயேசு கிறிஸ்துவினிடத்தில் நிலைத்து நிற்கச் செய்கிறார். அவர் இக்கிறிஸ்தவத் திருச்சபையில் எனக்கும் விசுவாசமுள்ள யாவருக்கும் தினந்தோறும் சகல பாவங்களையும் கிருபையாய் மன்னித்து, நியாயத்தீர்ப்பு நாளிலே எம் அனைவரையும் உயிர்த்தெழச் செய்து, எனக்கும் கிறிஸ்துவை விசுவாசிக்கிற யாவருக்கும் நித்திய ஜீவனை அளிப்பார். இது முற்றிலும் உண்மையானது.