351. மாசில்லாத் தேவ புத்திரன்

மாசில்லாத் தேவ புத்திரன்

பல்லவி

மாசில்லாத் தேவ புத்திரன்
மானிட னானார், ஜெய! ஜெய!

சரணங்கள்

1. ஆசீர் வாதமே!-கன தேசார்[1] நீதமே!-ஒளிர்
காசினி மீததி நேசப் பிரகாச விண் வாச கிருபாசன - மாசில்லாத்

2. சத்திய வாசகர்-சதா-நித்திய தேசிகர்-வளர்
பெத்லகேம் ஊர்தனிலே கரி சித்துக் கன்னியாஸ்திரி வித்தினில் - மாசில்லாத்

3. அந்தரம் பூமியும்-அதி-சுந்தர நேமியும்[2]-தினம்
ஐந்தொரு நாளினிலே தருமுந்தின மூன்றிலொன்றாகிய - மாசில்லாத்


ராகம்: சயிந்தவி
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்

[1]. ஒளி சிறந்த
[2]. கடலும்