மன்னுயிர்க்காக
பல்லவி
1. மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க
வல்ல பராபரன் வந்தார், வந்தார். -பாரில்
2. இந்நிலம் புரக்க, உன்னதத் திருந்தே
ஏகபராபரன் வந்தார், வந்தார். -பாரில்
3. வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர்,
மகிமைப் பராபரன் வந்தார், வந்தார். -பாரில்
4. நித்திய பிதாவின் நேய குமாரன்
நேமி[1] அனைத்தும் வாழ வந்தார், வந்தார். -பாரில்
5. மெய்யான தேவன், மெய்யான மனுடன்,
மேசியா, ஏசையா, வந்தார், வந்தார். -பாரில்
6. தீவினை நாசர், பாவிகள் நேசர்,
தேவ கிறிஸ்தையா வந்தார், வந்தார். -பாரில்
7. ஜெய அனுகூலர், திவ்விய பாலர்
திரு மனுவேலனே வந்தார், வந்தார். -பாரில்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்
[1]. பூமி