332. பூமியின் குடிகளே நீர் தாமதமிலாதியேசு

பூமியின் குடிகளே

பல்லவி

பூமியின் குடிகளே, நீர் தாமதமிலாதியேசு
சாமியினன்னாமமதிலே மகிழுவீர்.

அனுபல்லவி

ஓமனாதி[1] யந்தபரனே மனுடரான நம்மை
உருக்கமாய்த் - தங்கருணைப்
பெருக்கமாய் - மீட்டரணாந்
துருக்கமாய் - இதுவரைக்கும்
நெருக்கமாய் - ஊக்கமாய்நின்றார் - பூமி

சரணங்கள்

1. தந்தையார் தமதுநேச மைந்தனைப் பாதகர்க்காகத்
தந்துமா நிர்பந்தமற விந்தையாகவே,
இந்த நீசமான பூலோகந்தனை மீட்ட நேசத்தைச்
சிந்தைல் நினைந்து முழு நன்றியாகவே,
சந்ததமுமே துதிப்ப தந்தமான வேலையல்லோ?
    தாசரே - யேசுநாதர்
    நேசரே, - எருசலேம்
    வாசரே, - கர்த்தருக்குள்ளாம்
    ராசரே, - ஆசாரிமாரே! - பூமி

2. கர்த்தனார் ஒருவரே நம் நித்திய பரமனென்ற
சத்தியத்தை எத்தினமும் உற்றுணர்வீர்;
அத்தனார் படைப்புகளைப் புத்தியற்றுத் தெய்வமெனச்
சொற்றவரே விக்கிரகப் பத்தியகல்வீர்;
இத்தரையில் நாங்களல்ல உத்தபரன்[2] எங்களைக் கண்
    ணோக்கினார், - எங்கள்வம்
    போக்கினார், - சகலதுன்பம்
    நீக்கினார், - தமதுமந்தை
    ஆக்கினார், - தூக்கினாரென்று - பூமி

3. ஜீவபரன் வாசல்களில் மேவி எய்துவோம் துதியோ
டாவியுடனே நமது நாவுமிசைந்து
தேவ பிரகாரங்களிலே வருவோமே, புகழ்ச்சி
மாவுரிமை யோடுரைத்துக் கூவி மகிழ்ந்து
பாவலர் மற்றோரேநல்ல நாவலரே கர்த்தர்வீட்டுக்
    கோடுவோம், - அவர்நாமத்தில்
    கூடுவோம், - அவர்பதத்தை
    நாடுவோம், - அவர்மகிமை
    தேடுவோம், - பாடுவோம் துதி - பூமி

4. வல்ல பரனானவர் மா நல்லவர் அவர் கிருபை
உள்ள தூழி ஊழிகாலம், தொல்லையுண்டுமோ?
சொல்லரும் அவரதுண்மை யுள்ளதே தலைமுறைகள்
எல்லாவற்றிலு மெங்களுக்கல்லலண்டுமோ?
புல்லனாம் பேயினரசே யில்லையெனுமட்டும் காளம்[3]
    பிடிக்கிறோம், - சத்தியத்தைப்
    படிக்கிறோம், - பேயரங்கம்
    இடிக்கிறோம், - அவனையெங்கும்
    அடிக்கிறோம், - சீக்கிரம் ஜெயம் - பூமி


ராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: ஞா. சாமுவேல்

[1] ஆதி ஒலி (திருவார்த்தை)
[2] எக்காளம்
[3] எக்காளம்