331. புறப்படுங்கள் தேவ புதல்வரின்

புறப்படுங்கள்
                                             
பல்லவி

புறப்படுங்கள், தேவ புதல்வரின் ஊழியரே,

சரணங்கள்

1. கறைப்படா யேசுநாமம் கதித்து[1] மகிமைபெற,
பிறப்பினிலே உங்களைப் பிரித்த தயைநினைந்து, - புறப்

2. மாமிச இரத்தத்தோடு மயங்கி யோசிப்பதாலே
தாமசம் செய்ய வேண்டாம்; தரித்தெங்கும் நிற்கவேண்டாம் - புறப்

3. அழிவின் பாதையில் செல்லும் அநேகரைக் கண்டிருந்தும்
பழி சுமராதபடி பரனுரையைப் பகரப் - புறப்

4. சிலுவை மரத்தில் தொங்கி ஜீவனை விட்ட கர்த்தர்
வலுவான அன்பை உங்கள் மனதினிலே அணிந்து. - புறப்

ராகம்: சாவேரி
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்:  சா. சீமோன்

[1] சிறந்து