பவனி செல்கின்றார் ராஜா
பல்லவி
பவனி செல்கின்றார் ராசா-நாம்
பாடிப் புகழ்வோம், நேசா!
அனுபல்லவி
அவனிதனிலே மறி[1]மேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம். - பவனி
சரணங்கள்
1. எருசலேமின் பதியே[2] -சுரர்
கரிசனையுள்ள நிதியே!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே! - பவனி
2. பன்னிரண்டு சீஷர் சென்று-நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க,
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத. - பவனி
3. குருத்தோலைகள் பிடிக்க,-பாலர்
கும்புகும்பாகவே நடக்க,
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற. - பவனி
ராகம்: யமுனா கல்யாணி
தாளம்: ரூபக தாளம்
[1]. கழுதைக் குட்டி
[2]. மணவாளன்