நித்தம் முயல் மனமே
பல்லவி
நித்தம் முயல்[1] மனமே! பரி
சுத்த ஜீவியத்தில் மெத்த வளர நீ.
சரணங்கள்
1. அத்தன் யேசுவினில் பத்தியாய் அமர்ந்து
சத்திய வேதத்தால் நித்தம் உன்னைப் போஷி! -நித்தம்
2. அல்பகல் யேசுவோ டதிக நேரத்தை
ஆசையாய்க் கழி நீ, அவரைப்போலாவாய். - நித்தம்
3. தேவன்றன் பிள்ளைகள் யாவரையும் நேசி,
ஆவலாய் எளியோர்க் கன்பாலுதவி செய். - நித்தம்
4. யேசுவே உன்றனை என்றும் நடத்துவார்;
இன்ப துன்பத்திலும் அன்பாய் நீ பின்செல்லு. - நித்தம்
5. எந்த எண்ணத்தையும் யேசுவின் கீழ் ஆக்கி,
உன்றன் உள்ளத்தில் அமர்ந்திரு சாந்தமாய். - நித்தம்
6. மேவும் அன்பினுக்குள் தேவாவி நடத்த
மேலான வாழ்வுக்குத் தக்கவனாகுவாய். - நித்தம்
ராகம்: உசேனி
தாளம்: ரூபகதாளம்
ஆசிரியர்: வே. சந்தியாகு
[1] முயற்சி செய்