281. நித்தம் அருள்செய் தயாளனே

நித்தம் அருள்செய்

பல்லவி

நித்தம் அருள்செய்  தயாளனே!-எங்கள்
நேசா யேசு மணாளனே!-ஸ்வாமி - நித்தம்.

அனுபல்லவி

உத்தம சற்குண தேவ குமாரா!-
உம்பர்கள்[1] சந்ததம் போற்றும் சிங்காரா!
சத்திய வேதவி னோதலங்காரா!-
சதிசெய்யும் பேய் தலை சிதைத்த சிங்காரா! - நித்தம்

சரணங்கள்

1. பட்சப் பரம குமாரனே, எங்கள் பாவந்தீரும்
    மாவீரனே ஸ்வாமி!
அட்சய[2] சவுந்தர ஆத்துமநாதா, அடியவர் துதிசெய்யும்
    ஆரணபோதா,
ரட்சண்யச் சுப சுவி சேடப்பிரஸ்தாபா, ராசகெம்பீர,
    சங்கீத பொற்பாதா. - நித்தம்

2. சென்றாண்டெமை முகம் பார்த்தவா, ஒரு சேதம் விக்கின[3]
    மறக் காத்தவா,-ஸ்வாமி!
இன்றோர் புதுவரு டாரம்பங் கண்டோம், ஏக சந்தோஷ
    மாய்ச் சந்தித்துக் கொண்டோம்.
குன்றா[4] உமதுநல் லாவியை ஈந்து கூடவே இருந்தடியார்
    ஜெபங்கேட்டு. - நித்தம்


ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்:  ஆ.ஜா. பிச்சைமுத்து

[1] தேவதூதர்
[2] அழியாத
[3] இடையூறு
[4] குறையாத