சத்திய வேதம் திவ்யமான மதுரம்
பல்லவி
தேன் இனிமை யதிலும் சத்திய வேதம்
திவ்யமான மதுரம்.
அனுபல்லவி
ஞானமது நிறையும் வேதமதில் எனக்கு,
நாதனே, அருள்ஆசை அனுதினம் ருசித்திட. - தேன்
சரணங்கள்
1. ஆரணம் அதி புனிதம் களங்கம் இல்
லாத சுகிர்த அமுதம்;
பூரணமாய் அதைத் தான்உட்கொண்டே வரில்,
பொன்னுல கதற் கேற்ற தன்மை உண்டாக்குமே. - தேன்
2. பாதைக்குரிய தீபம்; மெய் வேதம்
பற்றிடில் மிகு லாபம்;
வாதை செய்திடும் பல சோதனைகளும் எதிர்
வரில் அனைத்தும் வெல்லத்தகும் படைக்கல[1] மதே. - தேன்
3. விண்ண தழிந்தாலும், அதோ டிந்த
மேதினி ஒழிந்தாலும்,
திண்ண மதாய் என்றும் சிறந்திலகும் ஜீவ
திருமறை எனில் தங்கிப் பலன் தர அனுக்ரதி - தேன்
4. எத்திசையிலுமுள்ள நரர் யாவரும்
ஏகன் நின் அறிவு கொள்ள,
சுத்த சுவிசேஷம் துலங்கிப்ர காசிக்கத்
தூய நல் ஆவியை யாவர்க்கும் ஈந்தருள். - தேன்
ராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: யோ. பால்மர்
[1] பேராயுதம்