விசுவாசமும் தேவபக்தியுமுள்ள சபைப் போதகர்கள், பிரசங்கிமார்கள் அனைவருக்கும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கூடாக கிருபையையும் கருணையையும் சமாதானத்தையும் மார்ட்டின் லூத்தர் அனுப்புகிறார்.
அண்மையில் சபைகளைப் பார்வையிட நான் வந்தபோது துயரமிக்க பரிதாபப்படத்தக்க நிலையை நான் கண்டேன். இதன் நிமித்தமாக இந்த ஞானோபதேசத்தை அல்லது கிறிஸ்தவக் கோட்பாடுகளை சுருக்கமான சாதாரணமான எளிமையான வகையில் எழுதும்படி நான் நெருக்கப்பட்டேன். அன்பான சர்வவல்லமையுள்ள தேவனே எனக்கு துணையளிப்பீராக! நான் பார்த்தவைகள் எவ்வளவு பரிதாபமாக இருந்தன! சாதாரண மனிதன் குறிப்பாக கிராமங்களில் உள்ளவன், கிறிஸ்தவ சித்தாந்தங்கள் குறித்து பெரும்பாலும் அறியாமல் இருக்கிறான். அநேக போதகர்கள் கற்றுக்கொடுக்க முற்றிலும் தகுதியற்றவர்களும் இயலாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
இது ஒருவர் பேசுவதற்கே வெட்கப்படும்படியான விடயமாக இருக்கிறது. எனினும் அவர்கள் எல்லோரும் தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறுகிறார்கள். ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆண்டவருடைய ஜெபம், அப்போஸ்தல விசுவாசப்பிரமாணம் அல்லது பத்துக்கட்டளைகள் ஆகியவற்றைக் கூறத் தெரியாதபோதிலும் பரிசுத்த திருவருட்சாதனத்தை எம்முடன் சேர்ந்து பெற்று மகிழ்கிறார்கள். அவர்கள் காட்டு விலங்குகளைப்போல வாழ்கிறார்கள். இப்போது சுவிசேஷம் வந்திருக்கிறது, கிறிஸ்தவ சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதில் கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள்.
ஓ பேராயர்களே! நீங்கள் உங்கள் பதவிகளுக்குரிய கடமைகளை ஒருகணமேனும் செய்யாமல் வெட்கப்படும்படியாக மக்களை அலைக்களிக்கும் வகையில் புறக்கணித்துள்ளீர்கள், கிறிஸ்துவுக்கு எப்படிப் பதில் கூறப்போகிறீர்கள்? தேவன் பராமரிக்கும்படி உங்களுக்கு ஒப்படைத்த உங்கள் கடமையை ஒருபோதும் நிறைவேற்றாது ஏனைய எல்லாவற்றையும் செய்கிறீர்கள். கிறிஸ்தவ சமயத்தின் சீரழிவிற்கு உங்களின் மீதே குற்றம் சுமத்த வேண்டும். இவ்விடத்தில் உங்கள் தலையின் மேல் தீமை சுமர வேண்டும் என்று நான் விரும்பவில்லை. எல்லா துர்பாக்கியங்களும் உங்களிடத்திலிருந்து ஓடட்டும்! நீங்கள் திருவருட்சாதனத்தை ஒருவகையில் மட்டும் செயற்படும்படி செய்கிறீர்கள். மனித வழிகளை கைக்கொள்ளும்படி வலியுறுத்துகிறீர்கள். ஆயினும் மக்கள் அவர்களுக்கு ஆண்டவருடைய ஜெபம் விசுவாசப்பிரமாணம் பத்துக்கட்டளைகள் அல்லது ஏதாவது ஒரு தேவவசனத்தையாவது தெரிந்திருக்கிறார்களா என்பதைப் பற்றி அக்கறை கொள்ளாமல் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்றென்றும் ஐயோ, ஐயோ!
ஆகையினால் எனது அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே கடவுளின் நிமித்தமாக போதகர்களும் பிரசங்கிகளுமாகிய உங்களை வேண்டிக்கொள்வது யாதெனில் நீங்கள் உங்கள் பதவிக்குண்டான கடமைகளை உண்மையாகச் செய்ய உங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அத்தோடு உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்கள் மீது அனுதாபங் கொள்ளுங்கள். மேலும் கூறப்பட்டதற்கு இணங்கி இந்த ஞானோபதேசம் மக்கள் மனதில் குறிப்பாக இளையோர் மனதில் ஆழமாக பதிய வைக்க எங்களுக்கு உதவி செய்யுங்கள். உங்களால் அதிகம் செய்ய முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் ஞானோபதேசம் போதனைக்கான பட்டியல்களையும் விளக்க அட்டவணைகளையும் எடுத்துச்சென்று அவற்றை வார்த்தைக்கு வார்த்தையாக பின்வருமாறு மக்களைப் பயிற்றுவித்து கவர்வதற்கு வெட்கப்பட வேண்டாம்.
முதலாவதாக, பிரசங்கியார் பத்துக்கட்டளைகள், கர்த்தருடைய ஜெபம், விசுவாசப்பிரமாணம், திருவருட்சாதனங்கள் முதலானவைகளை பல்வேறு மொழிபெயர்ப்பு உரை மூலங்களையும் அல்லது படிவங்களையும் கொண்டு கற்பிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவர் ஒரே மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதிலேயே நீடித்திருக்க வேண்டும். முதலாம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வரும் ஆண்டுகளில் இதையே மாற்றாமல் பயன்படுத்த வேண்டும். இளையோருக்கும் சாதாரண மக்களுக்கும் நிலையான ஒரே முறையில் கற்பிக்கப்பட வேண்டும். ஆசிரியர் இன்று ஒருவிதமாகவும், இன்னுமோர் வருடத்தில் இன்னொரு விதமாகவும் கற்பித்தால் அவர்கள் எளிதாக குழம்பி விடுவார்கள். இதன் பலனாக முந்தின எல்லா முயற்சிகளும் உழைப்பும் வீணாகும். முதலில் கற்பித்ததில் குறை உள்ளதுபோல் எண்ணத் தோன்றும்.
எமது ஆசீர்வதிக்கப்பட்ட திருச்சபைப் பிதாக்கள் இதை நன்கு புரிந்து கொண்டனர். ஆகையினால் எல்லோரும் கர்த்தருடைய ஜெபம், விசுவாசப்பிரமாணம், பத்துக்கட்டளைகள் ஆகியவற்றில் ஒரே முறைமையை நிலையாகப் பயன்படுத்தினர். அவர்கள் கற்பித்ததைப்போல நாமும் இந்த விடயங்களை இளையோருக்கும் சாதாரண மனிதருக்கும் வருடா வருடம் அறிமுகப்படுத்தும்போதும் அல்லது எடுத்தாளும்போதும் ஒரு எழுத்தையும் மாற்றாமலும் அவர்களின் வார்த்தையை ஒருபொழுதும் வேறுபடுத்தாமல் செய்ய வேண்டும். ஒரு வருடம் கற்பித்த ஒரு வார்த்தையை அடுத்த வருடம் மாற்றி விடக்கூடாது.
ஆகையால் நீ விரும்புகிற எந்த முறைமையாவது தேர்ந்தெடுத்துக்கொள். ஆனால் எல்லாக் காலங்களிலும் அதில் நிலைத்திரு. ஒருவேளை நீ கற்றோர்களுக்கும் அறிவுக்கூர்மை படைத்தவர்களுக்கும் பிரசங்கிக்க நேரிட்டால் நீ வார்த்தைகளை உன்னால் முடியும் அளவிற்கு பல்வகை தேர்ச்சி வாய்ந்ததாகவும் சொற்றொடர்களாக மாற்றி உன்னுடைய திறமையை தெளிவுபடுத்தலாம். ஆனால் சிறார்க்கு ஒரே தனித்த நிலையான நிரந்தரமான முறைமையையும் வார்த்தைகளையும் பின்பற்றி, முதலாவது, பத்துக்கட்டளைகள், விசுவாசப்பிரமாணம், கர்த்தருடைய ஜெபம் முதலானவைகளைத் தலைப்பிற்கேற்ப வார்த்தைக்கு வார்த்தை கற்பிக்க வேண்டும். அதனால் அவர்கள் அதை திரும்பக்கூறி மனப்பாடம் செய்ய முடியும்.
இதைக் கற்றுக்கொள்ள மறுக்கிறவர்கள் கிறிஸ்துவை மறுதலிக்கிறார்கள் என்றும் அவருக்கு சொந்தமானவர்கள் அல்ல என்றும் கூறப்பட வேண்டும். திருவருட்சாதனத்தில் அவர்கள் அனுமதிக்கப்படலாகாது அல்லது ஞானஸ்நானத்தில் ஞானப்பெற்றோர்களாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது அல்லது கிறிஸ்தவ சுயாதீனத்துக்குரிய யாதொன்றையும் கையாள இடமளிக்கப்படக்கூடாது. அதற்குப் பதிலாக அவர்கள் போப்புவினிடத்திற்கும் அவருடைய அதிகாரிகளினிடத்திற்கும் ஆம் சாத்தானிடத்திற்கும் கூட திருப்பி அனுப்பத் தூண்ட வேண்டும். அவர்களுடைய பெற்றோரும் மேலாளர்களும் அவர்களுக்கு உணவையும் தண்ணீரையும் மறுக்க வேண்டும் (அவர்கள் இருந்தால் சிறப்பாக மேற்கொள்வர்). இப்படிப்பட்ட முரடர்களை இளவரசர் நாட்டிலிருந்து நீக்கிவிடுவாரென்பதை அவர்களுக்குத் தெரிவிக்கின்றபோது அவர்களும் சிறப்பாக செயற்படுவார்கள்.
நாம் யார் மீதும் கிறிஸ்தவ விசுவாசத்தைத் திணிக்க முடியாதென்றாலும் நாம் மக்களை நீடுறுதியாய் ஊக்குவிக்க வேண்டும். எனினும் அவர்கள் தொழில் செய்து வாழும் சமூகத்தில் எது சரி எது தவறு என எண்ணப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள உதவ வேண்டும். ஒரு குறிப்பிட்ட பட்டணத்தில் ஒருவன் வாழ விரும்பினால் அதிலுள்ள சிறப்புரிமைகளை அனுபவிக்கவும் வேண்டுமென்றால் அதனுடைய சட்டதிட்டங்களை அறிந்து கைகொள்ள வேண்டும். ஏனென்றால் அவன் ஒரு விசுவாசியாக அல்லது தன்னுடைய இருதயத்திலே தனிப்பட்ட விதமான திருடனாக அல்லது வீணனாக இருந்தாலும் அவன் சட்டம்; தரும் பாதுகாப்பை அனுபவிக்க விரும்புகிறான்.
இரண்டாவதாக, அவர்கள் சிறந்த முறையில் பாடத்தைக் (ஞானோபதேசம்) கற்றுக்கொண்டபின், அவைகள் என்ன கூறுகின்றன என்பதை அறியும் பொருட்டு பொருளைக் கற்பிக்க வேண்டும்இ ஆகவே மறுபடியும் விளக்க அட்டவணைகளோடோ அல்லது உங்களால் தெரிந்து கொள்ளப்பட்ட சுருக்கமான ஒரே சீரான முறைமையைப் பின்பற்றுவதனூடாகவோ அதை மேற்கொள்ள வேண்டும். மேலே கூறியவாறு அதில் ஒரு பகுதியையேனும் மாற்ற வேண்டாம்;. தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கற்பிக்க வேண்டிய தேவை இல்லையானாலும் ஒன்றன்பின் ஒன்றாக கற்பிக்கவும். முதலாம் கட்டளையின் பொருளை நன்கு புரிந்து கொண்டபின் இரண்டாம் கட்டளைக்குச் செல்லுங்கள்இ அவ்வாறே ஒன்றன் பின் ஒன்றாக கற்பிக்கவும்இ இல்லையென்றால் சமாளிக்க முடியாமல், எதையுமே நினைவில் கொள்ள மாட்டார்கள்.
மூன்றாவதாக இப்படியே அவர்களுக்கு சிறிய ஞானோபதேசத்தைக் கற்பித்தபின் பெரிய ஞானோபதேசத்தை எடுத்து, விரிவானஇ முழுநிறைவான அறிவை அவர்களுக்குக் கொடுக்கவும். இங்கே ஒவ்வொரு கட்டளையையும்இ மன்றாட்டையும்இ அதன் பல்தரப்பட்ட செயற்பாட்டு பகுதியையும், உபயோகங்கள்இ பயன்கள்இ ஆபத்துக்கள் மற்றும் காயங்களையும் மேலும் பெரிதாக விளக்கவும். இதைக் குறித்து எழுதப்பட்ட அநேக புத்தகங்களில் இவை மிகுதியாக விவரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். உங்கள் மக்கள் வெகுவாகப் புறக்கணிக்கும் கட்டளைகளை அல்லது பகுதியை குறிப்பாக வலியுறுத்தவும். உதாரணமாக கைவேலைக்காரர்இவியாபாரிகள், விவசாயிகள்இ தொழிலாளர்கள் ஆகியோரிடையே களவை விளக்கும் ஏழாம் கட்டளையை அதிகமாய் வலியுறுத்த வேண்டும். ஏனென்றால் இவர்களில் பலர் உண்மை இல்லாதவர்களாயும், திருடர்களாகவும் உள்ளனர். அப்படியே இளையோருக்கும் சாதாரண மனிதருக்கும் நான்காம் கட்டளையை வலியுறுத்த வேண்டும். ஒழுங்கு உண்மையுள்ளவர்களாயும் கீழ்படிதலுள்ளவர்களாகவும் சமாதானமுள்ளவர்களாகவும் இருக்க அவர்களைத் தூண்ட வேண்டும். அப்படிப்பட்டவர்களை கடவுள் எப்படித் தண்டிக்கிறார் அல்லது எப்படி ஆசீர்வதிக்கிறாறென்று அநேக வேதாகம உதாரணங்களை எப்போதும் காண்பிக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும்இ பெற்றோர்களுக்கும்இ தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புதல்; தொடர்பான கட்டளையைப் பின்பற்ற வலியுறுத்த வேண்டும். பிள்ளைகளுக்கு, அது ஏன் அவர்களின் கடமையாக இருக்கிறது என்றும், அவ்வாறு அவர்கள் செய்யாவிடில் அது எவ்வளவு பயங்கரமான பாவம் என்பதைக் காண்பிக்க வேண்டும். மேலும் அத்தகைய புறக்கணிப்பினால் தேவனுடைய இராஜ்யத்தைiயும் உலகையும் தூக்கியெறிந்து அழிப்பதால், கடவுள் மற்றும் மனிதர்களுக்கும் மிக மோசமான எதிரிகளாகிறார்கள். தங்கள் பிள்ளைகள் போதகர்களாகவும், பிரசங்கிகளாகவும்இ எழுதுவினைஞராகவும் (ஏனைய பதவிகளுக்கு இந்த வாழ்க்கையில் நாமிதை பிரயோகிக்க இயலாது), இன்னும் இவற்றைப் போன்றதற்காகவும் பயிற்சி பெற அவர்கள் உதவாத நிலையானது எவ்வளவு மோசமான தீங்காகும் என்பதைத் தெளிவாகக் காண்பித்து, அதற்காக கடவுள் அவர்களை எவ்வாறு பயங்கரமாகத் தண்டிப்பார் என்பதையும் காண்பிக்கவும். இவைகளைப் பற்றி பிரசங்கிக்கும் தேவை அதிகமாய் இருக்கிறது. (உண்மையாகவே, இதைப்போன்று முக்கியமாகக் கருதப்பட வேண்டிய வேறெந்த தலைப்பையும் குறித்து எனக்குத் தெரியவில்லை.) ஏனெனில் பெற்றோர்களும் அதிகாரத்தில் இருக்கிறவர்களும் இவ்விடயத்தில் வார்த்தையால் கூற இயலாது, பாவம் செய்கிறார்கள். இதனால் பிசாசு பயங்கரமான காரியங்களை நடப்பிப்பதற்கான இலக்கை வைத்துள்ளான் (அவன் ஜெர்மனியை மிகப் பெரிய துன்பத்திற்குள் தள்ளிவிடக்கூடும்).
இறுதியாக, இப்போது போப்புவின் கொடுங்கோன்மை ஒழிக்கப்பட்டு விட்டதால் மக்கள் திருவிருந்துக்குப் போகாமலும் மேலும் அதை மதிக்காமலும் உள்ளார்கள் (பயனற்ற அல்லது தேவையற்றதொன்று). இங்கே மீண்டும் உற்சாகப்படுத்துதல் தேவையாகிறது. ஆயினும், இப்புரிதலுக்கூடாக நாம் எவரையும் விசுவாசத்திற்குள்ளே வந்திடவோ அல்லது திருவருட்சாதனத்தை பெற்றுக்கொள்ளும்படியோ, எவ்விதமான சட்டத்தையோ,
காலக்கெடுவையோஇ இடத்தையோ கட்டாயப்படுத்தக் கூடாது. ஆனால், அவர்கள் தங்கள் சொந்த இசைவுப்படி நம்முடைய வற்புறுத்தலின்றி, தாங்களாகவே போதகர்களாகிய நம்மைஇ திருவிருந்தை தங்களுக்கு அளிக்க வேண்டுமென்பதை வற்புறுத்தும்படியாக நமது பிரசங்கங்கள் அமைய வேண்டும். இவ்வாறு கூறுவதனூடாக இவ்விடயம் மேற்கொள்ளப்படுகிறது: யாராவது ஒருவன் குறைந்தது வருடத்திற்கு நான்கு முறையாவது ஆண்டவருடைய திருவிருந்தில் பங்கு கொள்ள விழையாதவனோ அல்லது விரும்பாதவனோ திருவிருந்தை நிந்திப்பவனாகவும் அவன் கிறிஸ்தவனற்றவனாகவும் அவன் அஞ்சப்படுகிறான். விசுவாசியாதவனும் சுவிசேஷத்தைக் கேட்க விரும்பாதவனுமாகிய ஒருவன் கிறிஸ்தவனாக இல்லாதிருப்பதைப் போலவே அவனும் இருக்கிறானென்று அவனுக்குக் கூறுவதே அவ்வழியாகும். ஏனெனில் கிறிஸ்து ‘இதை விட்டுவிடு’ என்றோ அல்லது இதை இகழ்ச்சி செய் என்றோ கூறவில்லை, ஆனால், “இதிலே பானம் பண்ணும் போதெல்லாம் இதைச் செய்யுங்கள்” என்றே கூறினார். அவர் புறக்கணியாமலும் நிந்திக்காமலும் முழுநிச்சயமாக அதை மேற்கொள்ள விரும்புகிறார். “இதைச் செய்யுங்கள்” என்றார்.
ஒருவன் திருவிருந்தை மிக உயர்வாக மதிக்கவில்லை என்றால் அவன் தனக்கு பாவம் இல்லைஇ மாம்சம் இல்லைஇ பிசாசு இல்லைஇ உலகம் இல்லைஇ மரணம் இல்லைஇ நரகம் இல்லை என்று கூறுவதற்கு ஒப்பானவனாக இருக்கிறான். அதாவது அவன் அவற்றால் மூழ்கடிக்கப்பட்டிருந்த போதிலும். அவன் இவற்றில் ஒன்றையும் நம்புகிறதில்லைஇ அவன் இருமடங்கு பிசாசை உடையவனாயிருக்கிறான். மாறாக அவனுக்கு கிருபைஇ வாழ்க்கைஇ மோட்சம்இ பரலோக இராஜ்யம்இ கிறிஸ்து, கடவுள் அல்லது எந்த நல்ல காரியமும் தேவைப்படுகிறதில்லை. அவனுக்குள் எவ்வளவு தீமை உண்டு, அவனுக்குள் குறைவுபடுகின்ற எவ்வளவு நன்மையான காரியங்கள் அவனுக்குத் தேவைப்படுகிறது என்று கண்டுணர்ந்தானானால் அப்படிப்பட்ட தீமைகளை எதிர்த்து ஏராளமான நன்மைகளை அளிக்கிறதுமான திருவிருந்தை அவன் புறக்கணிக்க மாட்டான். அவனை எந்தவொரு சட்டத்தினாலும் திருவிருந்தில் கலந்துகொள்ள கட்டாயப்படுத்துவதற்ககு அவசியமில்லை. மாறாக, தனது சொந்த விருப்பத்திற்கமைவாக ஆர்வத்துடன் ஓடி வருவதுடன் திருவிருந்தை அவனுக்கு அளிக்கும்படி உங்களை ஊக்குவிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுவான்.
ஆகவே போப் செய்ததைப்போல இதைக் குறித்து எந்தச் சட்டமும் இயற்ற வேண்டாம். திருவிருந்தில் தொடர்புடைய நன்மை – தீமைஇ தேவை – பயன், ஆசீர்வாதம் – ஆபத்து ஆகிய இவைகளைத் தெளிவாக வலியுறுத்த வேண்டும். அப்போது மக்கள் உங்களுடைய வலியுறுத்தல் இல்லாமலேயே தாமாகவே முன்வருவார்கள். ஆனால் அவர்கள் இன்னும் வரவில்லை என்றால் அவர்களைப் போக விடுங்கள், அத்துடன் தங்களுடைய மிகப் பெரிய தேவை மற்றும் கடவுளின் கிருபையுள்ள உதவி இவைகளைப் பற்றிய உணர்வு இல்லாதவர்களாயும் அவர்கள் பிசாசுக்கு சொந்தமானவர்கள் என்று தெரிவித்து விடுங்கள். ஆனால் இந்தக் காரியங்களை வலியுறுத்தத் தவறியும் அல்லது நீங்கள் அதை சட்டமாகவும் அழிவுக்குரியதாகவும் மேற்கொண்டு அதனால் அவர்கள் திருவிருந்தை இழிவாகக் கருதிப் புறக்கணித்தால் அந்தத் தவறு உங்களுடையதாகும். நீங்கள் தூங்கிக்கொண்டும் அமைதியாகவும் இருந்தால் அவர்கள் ஏன் சோம்பேறிகளாய் இருக்கக் கூடாது? ஆகையால் போதகர்களும் பிரசங்கிகளுமாகிய நீங்கள் இதை கவனியுங்கள். நம்முடைய தேவ ஊழியம் போப்புவின் கீழ் இருந்ததை விட இன்று பாராட்டத்தக்க விதமாக வேறுபட்டிருக்கிறது. இப்போது இது கருத்தாழம் மிக்கதும் நலம் விளைவிக்கிறதுமாயுள்ளது. அதன் விளைவாக இப்பொழுது அதுஇ இன்னும் அதிகமான சிரமங்களையும்இ உழைப்பையும்இ ஆபத்தையும் மற்றும் சோதனையையும் உள்ளடக்கியுள்ளது. அத்தோடு கூட உலகத்தினிடமிருந்து குறைவான நன்றியையும்இ வெகுமதிகளையும் அது கொண்டு வருகிறது. ஆனால் உண்மையாக உழைத்தால் கிறிஸ்துவே நமது வெகுமதியாவார். எல்லாக் கிருபைகளின் தந்தையானவர் இம்மாதிரியாக நிறைவு செய்திட எங்களுக்கு உதவி புரிவார். நம்முடைய ஆண்டவராகிய கிறிஸ்துவின் வழியே அவருக்கு துதியும் நன்றியும் என்றென்றும் உண்டாவதாக! ஆமென்.
அருட்திரு. கலாநிதி. மார்ட்டின் லூத்தர்