361. வந்து நல்வரம் தந்தனுப்பையா

நல்வரந் தந்தனுப்பையா

கண்ணிகள்

1. வந்து நல்வரம் தந்தனுப்பையா,-ஆதிநாதா, ஜோதீ,
வல்ல ஆவியை நல்கியாளையா.

2. பண்ணின ஜெபம் எண்ணிக்கேள், இன்னும்-ஆதிநாதா, ஜோதீ,
பண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும்.

3. காதில் கேட்ட உன் வேத வாக்கியம்,-ஆதிநாதா, ஜோதீ,
கருத்தில் இருத் தப்போதே பாக்கியம்.

4. புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே-ஆதிநாதா, ஜோதீ,
புத்தி தா நான் புதிதாய் உய்யவே.

5. இந்தப் பலியின் இனிய கந்தமே,-ஆதிநாதா, ஜோதீ,
என்னில் கமழ ஈவாய் அந்தமே.


ராகம்: ஆனந்தபைரவி
தாளம்: ரூபகதாளம்
ஆசிரியர்:  ச. அருமைநாயகம்