302. பரம வைத்தியா அருமை ரட்சகனே

வைத்தியப் பணியினை ஆசீர்வதியும்

பல்லவி

பரம வைத்தியா! அருமை ரட்சகனே! பிணிதீர்க்கும்
வைத்தியப் பிணியினை ஆசிர்வதியும் ஐயனே!

சரணங்கள்

1. பிணியாளிக்கு நம்பிக்கை தாருமே-மருந்தோடே உமது
பேரதிசய கிருபை கூருமே. - பரம

2. உள்ளக் கனிவோடுழைக்கும் வைத்தியர்க்கும்-அவருடன் துணை நின்று
உதவும் தொண்டர்கள் யாவர்க்கும் இரங்கும். - பரம

3. சயமும் சுரமும் பயமுறுத்துமே,-இதைத் தடுத்திடக் கொடை
தரும் பெரியோரைப் பெருகச் செய்யுமே. - பரம

4. அரிய நூதன முறைகள் காணவே-ஆராய்ச்சிகள் செய்யும்
அறிஞரால் புதுவழிகள் தோன்றவே. - பரம

5. ஜெபத்தைக் கேட்கிற தேவன் நீரல்லவா? எங்கள் ஜெபத்தினால் சுகம்
ஜெகத்தில் பரம்பச் செய்யும் வல்லவா! - பரம


ராகம்: உசேனி
தாளம்:  ரூபகதாளம் 
ஆசிரியர்: ல. பொன்னுசுவாமி