286. நின் பாதம் துணை அல்லால்

வேறொரு துணை இல்லை

பல்லவி

நின் பாதம் துணை அல்லால், வேறொரு துணை
    இல்லை,-
நித்ய பரம போதா.

அனுபல்லவி

என் பாவம் போக்கியே கிருபை புரியும், சுவாமீ,
ஏக வஸ்துவான ஏசுக் கிறிஸ்து நாதா! - நின்

சரணங்கள்

1. ஆதி மனிதருக்கன் றோதியபடி மனு அவதாரமாய்ப் பிறந்தீர்;
ஜாதி அனைத்தும் உய்ய,[1] நீதிக்கென்று தலைசாய்த்துக் குருசில்
    இறந்தீர்;
வேதம் முழுதும் நிறைவேற்றிக் கடைசியிலே வெற்றி முடியும்
    சிறந்தீர்;
ஏதம்[2] இல்லாத அ னாதி திருமகனே.
எங்கும் நிறைந்திலங்கும் ஏசுகிறிஸ்தென் தேவா! - நின்

2. தேவரீருக் கேற்காத குற்றம் செய்திருந்தாலும், சித்தம் இரங்கி
    வாரும்;
மேவி எனது வினை யாவும் அகல இந்த வேளை எனையும் காரும்;
பாவிக்குதவியாக, மனுவேலே, நீர் பட்ட பாடனைத்தையும்
    பாரும்;
ஆவலாக உனை அடைந்து சரண் புகுந்தேன்;
ஆபத்தை நீக்கும், ஐயா, இப்போ மெய்யாய்! - நின்


ராகம்: காம்போதி
தாளம்: சாபு தாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்

[1] பிழைக்க
[2] குற்றம்