நம்பி வந்தேன்
பல்லவி
நம்பிவந்தேன் மேசியா, நான் நம்பிவந்தேனே,-திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பிவந்தேனே.
சரணங்கள்
1. தம்பிரான் ஒருவனே, தம்பமே[1] தருவனே;-வரு
தவிது குமர குரு பரமனுவேலே, நம்பிவந்தேனே. - நான்
2. நின்பாத தரிசனம் அன்பான தரிசனம்;-நித
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே. - நான்
3. நாதனே, கிருபைகூர்; வேதனே, சிறுமைதீர்;-அதி
நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே - நான்
4. பாவியில் பாவியே, கோவியில் கோவியே,[2]-கன
பரிவுடன் அருள்புரி, அகல விடாதே; நம்பிவந்தேனே - நான்
5. ஆதி ஓலோலமே,[3] பாதுகா காலமே-உன
தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த; நம்பிவந்தேனே - நான்
ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்
[1] பற்றுக்கோடு
[2] கோபம் உள்ளவன்
[3] ஒலி (திருவார்த்தை)