256. தேவ வசனத்தையே நீராவலுடன்

தேவ வசனத்தையே

பல்லவி
          
தேவ வசனத்தையே நீராவலுடன் கேட்டதனின்
செய்கைக்காரருமாகுங்களேன் செவ்வையாவே. - தேவ

சரணங்கள்

1. செய்கையற்ற கேள்விக்காரன் மெய்யாய்த் தன்னிலை மறந்தான்
ஐயோ அவன் நிர்ப்பாக்கியனே, அருளில்லானே. - தேவ

2. பூரண விடுதலையின் ஆரணந்தன்னில் நிலைத்துத்
தாரணியில் நற்செய்கையுள்ளோன் தகுபாக்கியனே. - தேவ

3. தேவமகிமை நவிலும் நாவையடக்காமலே தான்
தீங்குற இதயம் எத்துவோன், தெய்வபத்தி யவம். - தேவ

4. அநாதர் விதவைகளை ஆதரித்துல காற்கறை
அணுகாது காப்பதே பத்தி அம்பர தந்தை முன். - தேவ

5. கிருபை விண்ணப்பங்களின் திரு ஆவியை யூற்றுவன்
பிதாவை யாவியுண்மையிலும் சதா பணிவீர். - தேவ


ராகம்: உசேனி
தாளம்: ரூபக தாளம்
ஆசிரியர்: ல. யோசுவர்