253. தேவ தேவனே எகோவா

தேவ தேவனே எகோவா
                                                    
பல்லவி

தேவ தேவனே, எகோவா,
வா, என் ஜீவனே.

அனுபல்லவி

காவலர்க் குபதேசனே,- கனபாவிகட் கதிநேசனே - உயர்
கர்த்தன் ஏக திரித்துவ ஞான மகத்துவ 
ராஜகிறிஸ்துவாகிய     -தேவ

சரணங்கள்

 1. அந்த[1] மேனியே,- கனம் பெரும்-அனந்த ஞானியே,
விந்தை மானியே,[2]-சுந்தரம்-மிகுந்த தானியே,[3]
தந்தையர் தர, வந்தவா,-பசு
மந்தை யூடு பிறந்தவா,-கதி
தந்தவா, சொல் உவந்தவா,-மெய்
சிறந்தவா, விண்ணெழுந்தவா, திவ்ய - தேவ

2. சத்திய வாசனே,- யூதர்குலத்-தவிது ராஜனே,
நித்திய நேசனே,-அடியவர்-நிலைமை ஈசனே,
பத்தருக்குப காரனே,-வளர்
பெத்தலைக் கதிகாரனே,-வளர்
பாரனே, அதி தீரனே,- நல்
உதாரனே, பெல வீரனே, ஜெய - தேவ

3. வான சீலனே,- மனு உரு-வான கோலனே,
ஞான பாலனே,-அதிசய-நன்மை நூலனே,
பானுவே[4] மனுவேலனே,-இம்
மானுவேல் அனுகூலனே,-கன
பத்தியே தரு துத்தியமே,-நெடு
நித்தியமாய் வளர் வஸ்துவே ஒரு - தேவ

ராகம்: துசாவந்தி
தாளம்: ரூபகதாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்

[1]. அழகு
[2]. பெருமையுள்ளவனே
[3]. இடம்பெற்றவனே
[4]. சூரியனே